// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் இலங்கை வருகை; நாளை அறிக்கை வெளியிடுகிறார்

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த வருடாந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்விற்காக டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பில் 28 ம் திகதி இடம்பெறவுள்ள அறிக்கை வெளியிடும் நிகழ்வில் டெப்புரோஸ் முச்சேனா கலந்துகொண்டு உரையாற்றுவார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமை நிலவரத்தை கருத்தில் கொள்ளும்போது நாட்டின் 22 மில்லியன் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையிலும் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பதன் மூலமும் வலியுறுத்தவுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான மூத்த இயக்குநராக பணிபுரியும் இவர் டெப்புரோஸ் முச்சேனா சர்வதேச மன்னிப்புச்சபையின் பிராந்திய அலுவலகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மனித உரிமைகள் தடயத்தை விரிவுபடுத்துவதற்கான  ஆணையை முன்னெடுக்கின்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்