day, 00 month 0000

ராமர் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் ராமர் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக்கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களின் சங்கிலி ஆகும்.

இந்நிலையில், சட்டத்தரணி அசோக் பாண்டே தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில், அடியார்களுக்கு வசதியாக அந்த இடத்தில் சுவர் ஒன்றை கட்டவும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமர் சேதுவை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பாரதீய ஜனதாவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முன்னர் தாக்கல் செய்த மனுவை விரைவில் பட்டியலிடுவதாக இந்திய உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 20ஆம் திகதியன்று அறிவித்துள்ளது.

ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சுண்ணாம்புக்கற்களின் சங்கிலி தொடர் ஆகும்.

அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்திற்கு எதிரான தனது பொதுநல மனுவில் ராமர் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்பிரமணியன் சுவாமி விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் 2007 இல் ராமர் சேது திட்டத்திற்கான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்திற்கு சில அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மன்னாரை பாக்கு நீரிணையுடன் இணைக்கும் வகையில், 83 கிலோ மீற்றர் நீளமுள்ள நீர் வழித்தடம், விரிவான அகழ்வு மற்றும் சுண்ணாம்புக் கற்களை அகற்றுவதன் மூலம் இந்த திட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்