// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நட்டஈட்டை வழங்க உதவி செய்யுங்கள் – மக்களிடம் மண்டியிட்ட மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இந்த நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், தன்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடலாம் என்பதனால் தனக்கு உதவி செய்யுமாறும் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிரகாரம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்