// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஈழத் தமிழர் இனப்படுகொலை விவகாரம் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த சாட்சியம்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றங்களில் சிறிலங்கா அரசாங்கம் மெத்தனப்போக்கில் இருப்பதாக சுயேச்சை உறுப்பினரும் செனட்டருமான லிடியா தோர்ப் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு மார்ச் 6 ஆம் திகதி லிடியா தோர்ப்பை சந்தித்தனர்.

லிடியா தோர்ப் அன்று தமிழ் அகதிகளின் கதைகளையும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தமிழீழத்தில் நடந்து வரும் இனப்படுகொலையின் சாட்சிகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இன்று செனட்டர் லிடியா தோர்ப் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 33 வயதான ஈழத்தமிழர் ஒருவரின் கதையை வாசித்தார்.

தமிழீழத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நேரில் கண்ட அவரது கதையை அந்த உரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

செனட்டர் லிடியா தோர்ப், இனப்படுகொலையை அங்கீகரிப்பது அவசியம் என்றும், எமது தாயகம் தமிழீழம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

அகதிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் சித்திரவதை வடிவங்களையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றங்களில் அவர்கள் மெத்தனமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளுமாறு குடிவரவுத் துறையிடம் அவர் வலியுறுத்தினார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக தமிழ் அகதிகள் பேரவை செனட்டர் லிடியா தோர்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்