// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள்

உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, வீட்டில் போதிய உணவு இல்லாததாலும், உணவு வாங்கப் பணமின்மையாலும், ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது உணவைப் பெறுவதற்காக குடும்பம் வைத்திருந்த தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் கண்டுபிடித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் 35 வீதமான குடும்பங்கள் தாம் சேமித்த பணத்தை அல்லது கடனை செலுத்த தவறிய பணத்தை பயன்படுத்துவதாகவும் அறிக்கை காட்டுகிறது.

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் குடும்பங்களின் எரிபொருள் விலை குறித்த கவலை ஜனவரியில் 11 வீதத்தால் 6 வீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் விலை குறித்த கரிசனை ஒரு வீதத்தால் 87 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனவரி மாத இறுதியில் ஊவா மாகாணத்தில் அதிக உணவுப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஊவா மாகாணத்தில் கடந்த டிசம்பரில் 43 சதவீதமாக இருந்த உணவுப் பற்றாக்குறை ஜனவரி மாத இறுதிக்குள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேல்மாகாணத்தில் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜனவரி மாதத்தில் உணவுப் பாதுகாப்பின்மை 10 வீதத்தால் குறைந்துள்ளது இதன் காரணமாக ஜனவரி மாத இறுதிக்குள் (23 சதவீதம்) இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மாகாணமாக மேல் மாகாணம் மாறியுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்