// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தும் இந்திய இராணுவம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய இராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

குளிர்கால விடுமுறை காரணமாக மாணவர்களால் படிப்பை தொடர முடியவில்லை.

இதனால், போனியாரில் உள்ள இந்திய இராணுவ வீரர்கள் தொலைதூர கிராமங்களில் உள்ள சிறு குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து அவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செயதுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு இந்திய இராணுவம், தொடர்ந்து கல்வி கற்பதற்காக ஆசிரியர்களை வழங்கியது.

இந்த தொலைதூர கிராமங்களில் கல்வியைத் தொடரும் பெரும்பாலான மாணவர்கள் பெண்களாக உள்ளனர்.

தற்போது, சுமார் 300 மாணவர்கள் இந்திய இராணுவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்திய இராணுவம் இந்த மாணவர்களுக்கு இலவச கற்றல்பொருட்களை வழங்கியதோடு அவர்களின் பாதுகாப்பிலும் கரிசனை கொண்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்