// print_r($new['title']); ?>
day, 00 month 0000

காதலர் தினத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் முக்கிய நாட்கள் , பிரபலங்களின் பிறந்த நாட்கள் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இந்தியாவின் குடியரசு தினத்தின் போது புதிய தேடு பொறியை மாற்றியது என்பது குறிப்பிட்டத்தக்கது. கேரளாவின் முதல் திரைப்பட நடிகையின் பிறந்த தினத்தை கொண்டாடிய அன்று அவரின் உருவத்தில் அமைந்த டூடுலை கூகுள் மாற்றியமைத்தது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறியும், பரிசு பொருட்களை பரிமாறியும் அன்பை வெளிக்காட்டி மகிழ்ச்சி அடைவர்.

இந்த காதலர் தினத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை மாற்றியமைத்தள்ளது.  இன்று வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் நீர் துளிகள் ஒன்றாக இணையும் போது ஹார்ட்டின் அமைப்பு வருவதை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்