// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கமல்ஹாசன் உரையால் எழுந்த சர்ச்சை

பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உரையற்றும் போது கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் கூறிய கருத்துக்கள் தொடர்பில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந் நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த போது உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய உலகின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமை இலங்கையையே சாரும்.

இந் நிலையில் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் கமல்ஹாசன் இவ்வாறானதொரு தவறான தகவல் வெளியிட்டது பலர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து 'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' என்று கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டார நாயக்க கணவரின் மரணத்தை அடுத்து பிரமதராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 'உலகின் முதலாவது பெண் பிரதமர்' எனும் பெருமை அவருக்கு  பெற்றமை குறிப்பிடத்தக்கது.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்