// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பஞ்சாப் எல்லையில் உள்ள காவல் நிலையம் மீது ரொக்கெட் லாஞ்சர் தாக்குதல்

பஞ்சாபின் எல்லை மாவட்டமான டர்ன் தரனில் உள்ள ஒரு காவல் நிலையம், ராக்கெட்-லாஞ்சர் ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்ஹாலி காவல் நிலையம் சனிக்கிழமை இரவு ராக்கெட் லாஞ்சர் வகை ஆயுதத்தால் தாக்கப்பட்டது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி அமைப்பான, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (SFJ) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் நடந்துள்ளது, இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை.

பாகிஸ்தான் எல்லையில் டர்ன் தரன் மாவட்டத்தின் அமிர்தசரஸ்-பதிண்டா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல்நிலையத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் ராக்கெட் லாஞ்சரை வீசினார்கள். காவல் நிலையத்தின் கதவு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். இந்த தாக்குதலில் அருகிலுள்ள சேவை மையத்தின் ஜன்னல்களும் சேதமடைந்துள்ளன.

முன்னதாக, மே 9 அன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகத்தில் ராக்கெட் லாஞ்சர் மூலமாக கையெறி குண்டு வீசப்பட்டது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்