// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நாடகம் பார்த்த மூன்று சிறுவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய வட கொரியா

தென் கொரிய டிராமா பார்த்ததான குற்றச்சாட்டின் கீழ் 3 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது வட கொரியா.

’கே-டிராமா’ என்ற புத்தாயிரத்தின் புதிய பொழுதுபோக்கு அலைக்கு தமிழகத்திலும் தீவிர ரசிகர்கள் உண்டு. ஓடிடி உபயத்தில் தென்கொரிய வலைத்தொடர்கள் தமிழ் பேசியும் வருகின்றன. இங்கு மட்டுமன்றி, கே-டிராமா தொடர்கள் மற்றும் தென் கொரிய இசை வெளியீடுகளை உள்ளடக்கிய ’கே-பாப்’ ஆகியவற்றுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. ஆனால் தென் கொரியர்களின் சகோதர தேசமான வட கொரியாவில் இவை தண்டனைக்கு உரிய குற்றங்கள்.

தென்கொரிய பின்னணியிலான டிராமா, இசை என பொழுதுபோக்கு மற்றும் கலை வடிவங்கள் அனைத்தும் அங்கே தடை செய்யப்பட்டுள்ளன. தடையை மீறுவோருக்கு பொது இடத்தில் மரண தண்டனை விதிப்பதற்கும் வட கொரிய சட்டங்கள் வகை செய்கின்றன. இதனால் எல்லை வாயிலாக கடத்தப்படும் கே டிராமா டிஜிட்டல் பதிவுகளை அரசாங்கம் அறியாது வட கொரியர்கள் கண்டு மகிழ்கின்றனர்.

தற்போதைய சூழலில் தென்கொரியாவுக்கு எதிரான கடும் ஏவுகணைத் தாக்குதலை வட கொரிய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல்களை வடகொரியா முன்னெடுத்து வருகிறது. தென்கொரிய எல்லைக்கு அருகிலும், அதன் கிழக்கும் மற்றும் மேற்கு கடற்பரப்பிலும், 2 நாட்களாக நூற்றுக்கும் மேலான ஏவுகணைகளை வட கொரியா வெடிக்கச் செய்துள்ளது. ஏவுகணை தாக்குதல்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரிடையாக பார்வையிட்ட படங்களையும் வட கொரியா வெளியிட்டது. இவை கொரிய தீபகர்ப்பத்தில் புதிய போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளன.

தனது தென் கொரிய எதிர்ப்பு நிலையை உலகுக்கு தெரிவிக்கும் வகையில், அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 3 சிறுவர்களுக்கான மரண தண்டனை விபரங்களை தற்போது வட கொரியா கசிய விட்டுள்ளது. 16 வயதுடைய 3 சிறுவர்களும் தடைசெய்யப்பட்ட கே-டிராமாவை, டிஜிட்டல் உபகரணங்கள் வாயிலாக ரசித்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர். உடனடியாக அந்த சிறுவர்களை பொதுஇடத்தில் வைத்து சுட்டுக்கொன்றதன் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்