// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ரேடரில் சிக்காத போர் விமானம் அறிமுகம்

உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு B-21 ரைடர் போர் விமானத்தை அமெரிக்கா வெளியிட்டது. 30 ஆண்டுகளில் இந்த நவீன வசதி கொண்ட ரைடரின் அணியைஉருவாக்கவும், வாங்கவும் இயக்கவும் 203 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு செலவாகும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. இந்த வகை குண்டுவீச்சு ரைடர்களில் குறைந்தபட்சம் 100 விமானங்களை வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

போர் விமானத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. இது ஒரு ஆளில்லாத விமானமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகின் நவீன மற்றும் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி ரைடர் விமானம் பற்றி அமெரிக்க விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறுவது என்ன தெரியுமா? "விமானம் பணியாளர்கள் இல்லாமல் பறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது".

அமெரிக்க விமானப்படை உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு போர் விமானம் B-21 ரைடர், 9,600-கிலோமீட்டர் தூரம் வரை குண்டு வீசக்கூடியது. தோராயமாக 10-டன் பேலோடைக் கொண்டுள்ளது. இந்த விமானம், கலிபோர்னியாவின் பால்ம்டேலில் உள்ள நார்த்ரோப் க்ரம்மன் தயாரிப்புத் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.   

B-21 ரைடர் ஒரு சப்சோனிக் விமானமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது."புத்திசாலித்தனம் மற்றும் கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவின் நீடித்த நன்மைகளுக்கு இது ஒரு சான்று" என்று வெளியீட்டு விழாவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க விமானப்படை குறைந்தது 100 விமானங்களையாவது வாங்க திட்டமிட்டுள்ளது.

எதிரியின் ரேடாரை எளிதில் ஏமாற்றிவிட்டலாம்
B-21 ஆனது பிற ரேடார்களின் வலைக்குள் சிக்காத அளவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானம் "ஓபன் சிஸ்டம் ஆர்க்கிடெக்சருடன்" கட்டப்பட்டுள்ளது, இது "இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஆயுதங்களை" இணைக்க அனுமதிக்கிறது என்று ஆஸ்டின் கூறினார். இந்த போர் விமானங்கள் கொண்ட விமானப் பிரிவை உருவாக்க 203 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்