// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவருக்கே தெரியாமல் பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் போன்களில் கண்டிப்பாக இருக்கும் ஒரு பிரபலமான செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான், இந்த பிரபலமான மெசேஜிங் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  மெட்டாவுக்குச் சொந்தமான இந்த செயலியில் மெசேஜ், ஆடியோ  அல்லது வீடியோ கால், புகைப்படங்கள், வீடியோ, ஃபைல்கள் என அனைத்தையும் நீங்கள் விரும்பும் நபருடன் பரிமாறிக்கொள்ளலலாம்.  இந்த செயலியில் தனி நபருக்கு மட்டும் செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமின்றி குழுவாகவும் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.  அதிலும் இப்போது வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்கேற்ப பலவிதமான புதுப்புது அப்டேட்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றே வாட்ஸ் அப்பிலும் பலவித அம்சங்கள் வந்துள்ளது.  வாட்ஸ் அப்பில் நாம் விரும்புவதை அல்லது மனதில் உள்ளதை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டேட்டஸ்களை வைக்கலாம், அந்த ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க முடியும், அதேபோல மற்றவரின் ஸ்டேட்டஸை நாம் பார்த்தால் அவர்களுக்கும் நாம் பார்த்தது காண்பிக்கும்.  நாம் ஒருவரின் ஸ்டேட்டஸையும் பார்க்க வேண்டும் அதேசமயம் நாம் பார்ப்பது அவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று சிலர் நினைப்பார்கள், அப்படி சிலர் விருப்பப்படும் அம்சம் வாட்ஸ் அப்பில் உள்ளது.  வாட்ஸ் அப்பில் read-receipts என்கிற ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் பிறரது ஸ்டேட்டஸை நீங்கள் அவருக்கு தெரியாமல் பார்த்து கொள்ளலாம்.  இப்போது ஒருவருக்கு தெரியாமல் நாம் எப்படி அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்க்கலாம் என்பது பற்றி இங்கே காண்போம்.

read-receipts ஆஃப் செய்வது எப்படி?

1) முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.

2) மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைத் தட்டவும் மற்றும் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.

3) அதில் அக்கவுண்ட் என்பதைக் கிளிக் செய்து, பிரைவசி என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

4) இப்போது read-receipts என தென்படும் ஆப்ஷனை ஆஃப் செய்யவேண்டும்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை ஆஃப்லைனில் பார்க்க:

1) வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்டேட்டஸை அப்லோடு செய்வதற்க்கு சில நிமிடங்கள் காத்திருக்கவும்.

2) இப்போது உங்கள் மொபைலில் உள்ள வைஃபை அல்லது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு, நீங்கள் பார்க்க விரும்பும் ஸ்டேட்டஸை பார்க்கலாம்.

Incognito mode முறை : 

நீங்கள் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், incognito modeக்கு மாறி, இணையத்திற்கான வாட்ஸ்அப்பைத் திறக்கவும். மற்றவருக்குத் தெரியாமல் ஸ்டேட்டஸை பார்க்க முடியும்.

File Manager மூலம் ஸ்டேட்டஸ் பார்த்தல்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பார்க்க மேலும் ஒரு வழி உள்ளது, அதாவது வாட்ஸ்அப் ஃபோல்டரில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து வாட்ஸ்அப் மீடியாவையும் பார்க்கலாம்.  இதனை செய்ய  File Manager > Internal Storage > WhatsApp > Media. செல்லவும்.  அதில் ஸ்டேட்டஸ் என்பதை திறந்து உங்கள் காண்டாக்ட்டுகளில் உள்ள நபர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை பார்க்கலாம்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்