// print_r($new['title']); ?>
day, 00 month 0000

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்!- கணவரை பார்க்க விரைந்த நளினி!

திருச்சி முகாமில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சக அகதிகள் போல் தங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், உள்பட ஏழு பெயரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நளினி உள்பட ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதில், முருகன், சாந்தன் ஆகியோர் இலங்கை தமிழர்கள் என்பதால் அவர்கள் திருச்சி அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதலையான நளினியோ தனது கணவர் தன்னுடன் வரவில்லையே என்ற வேதனையில் அவரை சந்தித்து கண்ணீர் வடித்தார்.

மேலும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் தனித் தனி அறையில் அடைக்கப்பட்டனர். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர்கள் மீண்டும் தனித் தனியாக அறைக்குள் அடைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

இதனிடையே, தங்களை மற்ற அகதிகள் போல் நடத்த வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடைய தனது கணவர் முருகனை பார்ப்பதற்காக நளினி திருச்சி முகாமிற்கு இன்று வந்தார். அவரிடம் முருகன் உள்பட நான்கு பேர் உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் திருச்சி சிறைக்கு சென்றுவிட்டார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்