2022 ஆம் ஆண்டு ரி 20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்ரேலிய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அந்த குழுவில் இருந்த இலங்கை அணி வெளியேறியது.அதேவேளை ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா இல்லையா என்ற முடிவு நாளை நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அமையும்.
நாளை சனிக்கிழமை இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அவுஸ்ரேலிய அணி தகுதிபெற முடியும்.இலங்கை இறுதி நான்கில் இருந்து வெளியேறினாலும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தானாக தகுதி பெற்றதை தற்போது உறுதி செய்துள்ளது.இரு குழுக்களிலும் முதல் நான்கு அணிகள் 2022 ரி-20 உலகக் கோப்பைக்கு தானாகவே தகுதி பெறும்.