day, 00 month 0000

நியூசிலாந்து முத்தரப்பு தொடர் – நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்

லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில்  வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட்டம்  செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ஓட்டம்  குவித்தார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ஓட்டம் , மொகமது ரிஸ்வான் 34 ஓட்டம்  எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ஓட்டம்  எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டம்  எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்