// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி!

ஆசிய கிண்ண மகளிர் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி, 14 வருடங்களுக்கு பின் இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஹர்சித சமரவிக்ரம அதிகபட்சமாக 35 ஓட்டங்களையும், அனுஸ்க சஞ்சீவனி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நுஷ்ரா சந்து மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, 123 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் பிஸ்மா மரூப் அதிகபட்சமாக 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்