// print_r($new['title']); ?>
day, 00 month 0000

விண்வெளியில் சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் சீனா

விண்வெளி ஆராய்ச்சியின் ஆய்வில், சீனா 2025-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு பயணம் செய்யும் முறையை சீனா அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணம் செய்பவர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று அவர்களை வீடுகளுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைப்பதாகவும் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

மூத்த ராக்கெட் விஞ்ஞானியும், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட ராக்கெட் நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங் இந்த விண்வெளி பயணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார். விண்வெளி சுற்றுலா விமானங்களான ஜெஃப் பெசோஸ் தலைமையிலான ப்ளூ ஆரிஜின் விமானத்தை போலவே இருக்கலாம் என்றும், இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்று கார்மென் கோட்டைத் தொட்டு திரும்பும் என்றும் கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு 2 கோடியே 29 லட்சம் ரூபாய் வசூலிக்கலாம் என்றும் திட்டமிட்டு வருகிறது.

சீனா சுற்றுலா விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவிற்கும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் தங்களே உருவாக்கி உள்ள ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஓட்டி செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. பெசோஸின் ப்ளூ ஆரிஜின் 2022 ஆம் ஆண்டில் மூன்று வெற்றிகரமான விமானங்களுடன் விண்வெளி சுற்றுலா பந்தயத்தில் முன்னணியில் இருந்தது.

அதே நேரத்தில், பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் அதன் முதல் பயணத்தைத் தொடர்ந்தது. பிறகு, ப்ளூ ஆரிஜின் பத்து நிமிடம் விமானத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் போது, ​​மஸ்கின் டிராகன் விண்கலம் நான்கு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவினரை மூன்று நாட்களுக்கு மேல் விண்வெளிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடதக்கது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிலவில் தனது முதல் பயணத்தை தரையிறக்க சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

நிலவு பயணத்தில் ஒத்துழைக்க இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், முஹம்மது பின் ரஷித் விண்வெளி மையம் மற்றும் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸால் உருவாக்கப்பட்டு சீனாவால் சந்திரனுக்கு வழங்கப்பட்ட சந்திரன் ரோவரான ரஷித்-2ல் இணைந்து செயல்படும். அதுமட்டுமல்லாமல், இரு நாடுகளும் செவ்வாய் கிரகத்திற்கு தங்கள் பயணங்களை அனுப்புவதில் வெற்றி பெற்ற பிறகு, இரு நாடுகளுக்கிடையே இது போன்ற முதல் ஒப்பந்தம் இதுவாகும்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்