// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்தியா- வங்கதேசம் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்திய- வங்கதேசம் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

பின்னர் இதுகுறித்து பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- 

கடந்த ஆண்டு வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடினோம். வரும் காலங்களில் இந்தியா- வங்கதேச உறவு புதிய உச்சத்தை தொடும். வங்கதேசம் இன்று இந்தியாவின் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் மிகப்பெரிய கூட்டாளியாக உள்ளது. மக்கள் ஒத்துழைப்பிலும் அவர்களிடையே தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம் இடையே வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரம் மாற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பான நிகழ்நேரத் தரவை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். 

பயங்கரவாதம் குறித்து விவாதித்துள்ளோம். மேலும், நமக்கு விரோதமான சக்திகளை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். 54 ஆறுகள் இந்தியா- வங்கதேச எல்லை வழியாக பாய்ந்து இரு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. குஷியாரா நதி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்