day, 00 month 0000

எம்எச் 370 வரலாறு அல்ல: பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் 10 ஆண்டு நினைவேந்தலில் புதிய தேடலுக்கு அழைப்பு

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை புதிய தேடலுக்கு அழைப்பு விடுத்தனர்.

2014 மார்ச் 8 அன்று 239 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 777 ரக எம்எச் 370 (MH370) விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் பயணித்தபோது மர்மமான முறையில் மாயமானது.

அதன் பின்னரான, வரலாற்றில் மிகப்பெரிய விமானத் தேடல் நடவடிக்கைக்கு பின்னரும், மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

10 ஆண்டு நினைவேந்தல்

ஞாயிற்றுக்கிழமை (03), மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள ஒரு வரத்தக நிலையத்தில், காணாமல் போன விமானத்தின் 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு தினத்த‍ை கொண்டாட சுமார் 500 உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடினார்.

இவர்களில் சிலர் சீனாவில் இருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

காணாமல் போன எம்.எச் 370 விமானத்தில் பயணித்த பயணிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் சீனப் பிரஜைகள் ஆவர்.

Oruvan

எம்எச் 370 வரலாறு அல்ல

இந்த கூட்டத்தில் பங்கெடுத்த 36 வயதான மலேசிய வழக்கறிஞர் கிரேஸ் நாதன் என்பவர் கூறுகையில்,

எம்எச் 370 வரலாறு அல்ல.

கடந்த 10 வருடங்களாக என்னால் மறக்க முடியாத உணர்ச்சிகரமான சம்பவம் இதுவாகும்.

குறித்த விபத்தின் போது விமானத்தில் எனது 56 வயதான தாயார் பயணித்தார் என்று கிரேஸ் நாதன், AFP செய்திச் சேவையிடம் கூறினார்.

அத்துடன், புதிய தேடுதலை நடத்த மலேசிய அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

விமானம் எங்கே?

நினைவேந்தல் நிகழ்வுக்காக மலேசிய சென்ற சீனாவின் ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதான லியு ஷுவாங் ஃபோங், விமானத்தில் பயணித்த 28 வயது மகன் லி யான் லின் என்பவரை இழந்தார்.

"என் மகனுக்கு நீதி கேட்கிறேன். விமானம் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மீட்பு பணிகளுக்கு என்ன நடந்தது?

இந்தியப் பெருங்கடலில் 120,000-சதுர கிலோமீட்டர் (46,000-சதுர மைல்) பரப்பளவில் மூன்று வருட தேடுதலில் விமானத்தின் எந்த தடயமும் கிடைக்கவில்லை, சில குப்பைகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

அவுஸ்திரேலிய தலைமையிலான மீட்பு நடவடிக்கை 2017 ஜனவரியில் இடைநிறுத்தப்பட்டது.

ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் 2018 இல் MH370 க்காக ஒரு மீட்பு நடவடிக்கையினை தொடங்கியது, எனினும் பல மாதங்களாகன தேடல் பணிகளுக்கு பின்னர் மீட்பு பணிகள் வெற்றியின்றி நிறைவுகக் வந்தது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்