உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, குறித்த குழுவினர் ஜனாதிபதி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.