// print_r($new['title']); ?>
day, 00 month 0000

எதிர்பார்ப்பு மிகுந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதுகின்றன என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.

ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. தலைவர்  ரோகித் சர்மா, துணை தலைவர்  லேகேஷ் ராகுல், முன்னாள் தலைவர்  விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் துடுப்பாட்டம்  தூண்களாக உள்ளனர். முக்கியமான இந்த ஆட்டத்தில் இவர்கள் சாதுர்யமாக விளையாட வேண்டியது அவசியம். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ஓட்ட மழை  பொழிவாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

இதேபோல் மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவர் வாய்ப்பு பெற்றால், ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டி வரும். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமும், துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் முதுகெலும்பாக உள்ளனர். பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஓட்டம்  குவிக்கும் எந்திரமாகத் திகழ்ந்து வருகிறார்.

பாகிஸ்தானில் நசீம் ஷா, முகமது நவாஸ், ஷதப் கான், ஹாரிஸ் ரவுப் என்று தரமான பவுலர்களுக்கு குறைவில்லை. மொத்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் தலைவர்  சாகித் அப்ரிடி சொன்னது போல, உச்சக்கட்ட அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அதை எந்த அணி திறம்பட கையாள்கிறதோ அந்த அணிக்கே முடிவு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர் ), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா. இலங்கை  நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்