cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ரசிகர்களை சீட்டு நுனிக்கு கொண்டு வந்த ஆஷஸ் இறுதி டெஸ்ட் போட்டி! இங்கிலாந்து அபார வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் 295 ஓட்டங்கள் எடுத்தது.

12 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது.

அந்த அணி 395 ஓட்டங்களை சேர்க்க, அவுஸ்திரேலிய அணிக்கு 384 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 60 ஓட்டங்களில் ஆட்டமிழக்கக, கவாஜா 72 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சரியாக செய்ததால் அவுஸ்திரேலிய அணி 334 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 2 - 2 என்ற கணக்கில் வென்று சமனில் தொடரை முடித்தன.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்