சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 96 வீரர்கள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளது.
62 வீரர்களும், 34 வீராங்கனைகளும் உள்ளடங்கிய இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
19ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவின் ஹாங்சூ நகரில் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவில் 40 விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், இதில் இலங்கை வீரர்கள் 20 விளையாட்டு நிகழ்ச்சிகளில் போட்டியிடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு விழாவிற்கு பல பரிந்துரைகளுக்கு மத்தியில், மிகவும் அத்தியாவசியமான அணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.