சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்றதை தொடர்ந்து அணியை பாராட்டி கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023ன் ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. மழையின் காரணமாக பல தடைகளுக்கு பின்னர் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை அணி வென்றது.
இந்நிலையில், பலரும் இறுதிப்போட்டி குறித்தும், சென்னையின் வெற்றிக் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், “என்ன ஒரு இறுதிப்போட்டி அது! டாடா ஐபிஎல் எப்போதும் போல மிகச்சிறந்த போட்டியாகவே அமைந்தது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள், அடுத்த ஆண்டு குஜராத் அணி வலுவாக திரும்பிவர வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.