// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அமெரிக்காவில் தீபாவளிக்கு விடுமுறை: நாடாளுமன்றத்தில் அதிரடி

அமெரிக்க நாட்டில் தீபாவளியை விடுமுறையாக அறிவிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளியும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது தீபாவளி விடுமுறையை, அமெரிக்காவின் 12 வது கூட்டாட்சி (Federal) அங்கீகாரம் பெற்ற விடுமுறையாக மாற்றும்.

  அண்மையில், பென்சில்வேனியா மாநில செனட் (அமைச்சரவை) தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றி இருந்தது.

இதனை, பென்சில்வேனியா மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்