day, 00 month 0000

பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த காவலரணுக்கு ஏற்பட்ட நிலை

யாழ். பண்ணை நாக பூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரண்  நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

பண்ணை நாக பூசணி அம்மன் குறித்த இடத்தில் வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த சிலையின்  பாதுகாப்புக்காக  தற்காலிக கூடாரம் அமைத்து பொலிசார் தங்கியிருந்தனர்.
 
வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் பொலிசார் அவ்விடத்தில் இருந்து அகன்ற நிலையில் கூடாரம் அகற்றப்படாமல் இருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்