// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

சூர்ய குமார் யாதவ் 35 பந்துகளில் 83 ஓட்டங்கள் எடுக்க, மும்பை அணி பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதல் ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது.  

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரேயொரு ஓட்டம் மட்டும் எடுத்து  ஆட்டமிழந்தார். 

அடுத்து களத்திற்கு வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் வெளியேற பின்னர் இணைந்த கேப்டன் டூப்ளசிஸ் – மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூப்ளசிஸ் 41 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார். இருவரின் விக்கெட்டுகளை இழந்த பின்னர் பெங்களூரு அணியின் ரன் குவிப்பு வேகம் கணிசமாக குறைந்தது.

பின்னர் வந்த லோம்ரோர் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்னும், கேதர் ஜாதவ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 12 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 199 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கினர்.  வழக்கம்போல மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் இஷான் கிஷன் 21 பந்துகளில் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து சூர்யகுமார் – நெஹல் வதேரா இணை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இருவரும் 64 பந்துகளில் 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரசிர்களை வியப்பில் ஆழ்த்தினர். 6 சிக்சர் 7 பவுண்டரியுடன் சூர்யகுமார்யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். நெஹல் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் சேர்க்க 16.3 ஓவரில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை அணி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்