இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டி ஜூன் 04ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.