// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சோனியா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

தேர்தல் பரப்புரையின் போது, பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹூப்ளியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்றார்.

இதை குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே புகார் அளித்துள்ளார். அதில், இறையாண்மை என்பது ஒரு நாட்டுடன் தொடர்புள்ள நிலையில், கர்நாடகா இறையாண்மை என சோனியா குறிப்பிட்டு பேசியதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்