// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜனாதிபதியுடனான பேச்சுவார்தையில் த.தே.கூ எம்.பிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்

எதிர்வரும் 11, 12, மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் வடக்கிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துப் பேசவுள்ளதாகவும் அதில் வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பிலும் வடக்கில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு எமது தாயக பூமி என்றும், எனவே, வடக்கு, கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கம், வடக்கு, கிழக்கிலிருக்கும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனியாக வடக்கை மட்டும் உள்ளடக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வடக்கு, கிழக்கு இணைந்த நாடாளுமன்ற  உறுப்பினர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்றும் அதன் அடிப்படையில், உரிய காலத்துக்கு முன் ஜனதிபதி அவரது கருத்தை மாற்ற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்