Aug 05

கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும்

கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் தொடர்பான அறிவித்தல்

காலம்: 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 9.00மணி தொடக்கம் மாலை 8.00மணிவரை.

இடம்: மோர்னிங்சைட் பூங்கா திடல் -06

வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் 8 மணிவரை மோர்னிங்சைட் நகரப் பூங்கா திடல் -“06” யில் நடைபெறவிருக்கின்றது. இவ் ஒன்று கூடலில் கனடாவாழ் வன்னி மக்களையும் அவர்தம் உறவினர் நண்பர்களையும் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

விளையாட்டுப்போட்டிகள் வயது ரீதியாக நடாத்தப்பட இருப்பதால் கலந்து கொள்பவர்கள் தங்களது வயதினை உறுதிப்படுத்தத்தக்க அத்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிப்பதோடு விளையாட்டுகளில் பங்குபற்றுவோர் பாதணிகள் அணிந்திருக்க வேண்டும் என்பதனையும் கவனத்தில் கொள்ளவும். குறித்த நேரத்தில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவிருப்பதால் காலதாமதமின்றி அனைவரையும் வருகை தருமாறு வேண்டுகின்றோம்.