Jun 19

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விசேட சந்திப்புக் கலந்துரையாடல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் உறுப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்த விசேட சந்திப்புக் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜூன் 22 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 இக் கலந்துரையாடலின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கௌரவ உருத்திரகுமாரன் அவர்களும் காணொளி மூலம் கலந்து கொள்வார். இந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால்நியமிக்கப்பட்ட Monitoring and Accountability Panel (MAP) செய்துவரும் இலங்கையின் யுத்தக்குற்றஉள்ளகப் பொறிமுறை தொடர்பிலான கருத்துப் பரிமாற்றம் இடம் பெறும்.  

குறிப்பாக (1) போர்க்குற்றம் புரிந்த ஸ்ரீலங்கா இராணுவ முக்கியஸ்தர்கள் மீது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்ற சட்ட நடவடிக்கைகள் குறித்தும், (2) இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவினைப் பலப்படுத்துவது குறித்தும், (3) மேற்சொல்லப்பட்ட நடவடிக்கைகள் இரண்டிற்கும் வலுச் சேர்க்கும்  செயல்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் விளக்கமாகக் கலந்துரையாடப்படும்.


இடம்: Estate Banquet & Event Centre


                      (430 Nugget Ave,                 Scarborough, ON M1S 4A4)


காலம்: 2017 ஜூன் 22ந் திகதி வியாழக்கிழமை

நேரம்: மாலை 7:00 மணி.

நிகழ்வின் பின் இரவு உணவு பரிமாறப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்:

சாந்தினி சிவராமன் 

தொலைபேசி: (416) 830-4305