Jul 17

நல்லூர் கந்தன் பெருந்திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழா அடுத்த மாதம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது

கொடியேற்றத்துக்கு முதல் நாளான 15 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடிச்சீலை எடுத்து வரப்படும். பின்னர்  மாலை 5 மணிக்கு வைரவர் சாந்தி இடம்பெற்று மறுநாள் முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றம் நடைபெறும்.

அதன்  தொடர்ச்சியாக 27 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறும். எதிர்வரும் செப்ரெம்பர் 8ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை 7 மணிக்குத் தீர்த்தத் திருவிழா இடம்பெற்று செப்ரெம்பர் 11 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

மேலும்  ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் இந்துக் கலாசார முறைப்படியான ஆடைகளுடன் கோவிலுக்குள் சென்றுவழிபடலாம் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.