Jun 04

மாபெரும் 13 வது உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு

வடக்கு மாகாண ஆளுனர் மேதகு ரெஜினோல்ட்  குரே  அவர்கள் மற்றும் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சித்துறை  அமைச்சர் திரு.பாண்டியராசன் உட்பட  பல  பேராசிரியர்கள். கலைஞர்கள். அறிஞர்கள்.வெளிநாட்டு பேராளர்கள்  பங்கு கொள்ளும்  மாபெரும் 13 வது உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு கருநாடக மாநிலம் பெங்களூரில் .

இந்த மாநாடு தொடர்பாக உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றியதலைவர் சரவணையூர் விசு செல்வராசா.மற்றும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க செயலாளர்  திரு.தர்மன் தர்மகுலசிங்கம் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்.

உலக தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர் நோக்குடனும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அரசியற் சார்பற்று இன, மத, பேதங்களை கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் எனும் ஒரே குடையின்கீழ் செயற்பட வேண்டும் என்ற நிறைந்த கொள்கையுடனும் தமிழ் மொழியினை மறந்து போனவர்களை தாய் மொழி தமிழுணர்வுக்கு கொண்டுவரும் நல்நோக்குடன் இவ்வியக்கம் 1974 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது . இலங்கையின் கலாச்சார தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமானது வெறும் ஆய்வு கட்டுரைகளை முன்னெடுக்கிந்றஅமைப்பேயின்றி தமிழர்களை வாழ்வியல் அடிப்படையில் இணைகின்ற செயல் திட்டம் அற்றது என்பதனை உணர்ந்து மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள் ஓன்று கூடி 1974 ம் ஆண்டு தைத்திங்கள் 8 நாள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்தனர். அன்று முதல் தமிழர்களை ஒன்றிணைப்பதில் இந்த இயக்கம் வெற்றி கண்டுள்ளது . இந்த இயக்கத்தினால் 13வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு கருநாடக தலைநகரில் பெங்களூரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ் இயக்கம் ,மலேசியாவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளதுடன். கடந்த மூன்றாண்டுகளில் .தென் ஆபிரிக்கா .டென்மார்க் . மலேசியா. யாழ்ப்பாணம்  ஆகிய இடங்களில் கலை இலக்கிய பெருவிழாக்களையும். நடத்தியதோடு மலேசியாவில் அகில குழந்தைகள் இலக்கிய மாநாடு இந்த மாதம்8ஆம் 9ஆம் 10 ஆம் திகதிகளில் நடத்திய கையோடு .பெங்களூரில்  13வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது 

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த இருநாள்மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை மாநாட்டுத்தலைவர்.சட்டக்கல்லூரி  பேராசிரியர்.சி .இராமமூர்த்தி. மாநாட்டு  ஒருங்கிணைப்பாளர்  திரு .இரா .மதிவாணன் . உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க கருநாடக கிளையின்   செயலாளர் திரு .சுந்தரவேலு  சுப்பிரமணி ஆகியோர் குழு அமைத்து சிறப்பாகச் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வடக்கு மாகாண ஆளுனர் மேதகு ரெஜினோல்ட்  குரே  அவர்கள் மற்றும் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சித்துறை  அமைச்சர் திரு.பாண்டியராசன் உட்பட  பல  பேராசிரியர்கள். கலைஞர்கள். அறிஞர்கள்.வெளிநாட்டு பேராளர்கள்  உட்பட கருநாடக தொழில் அதிபர்கள் சமூக சேவையாளர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள் .

இவ் இயக்கத்தின் கிளைகள் பல  நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும். 1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும்   2011ல் பிரான்சிலும் 2014ல்  ஜேர்மனியிலும் ஆக பன்னிரண்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 13வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு கருநாடக தலைநகரில் பெங்களூரில் நடைபெற உள்ளது.                

இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தென் ஆபிரிக்காவில். முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தமிழ்க்கல்விக்கான பாடநூல்கள் வெளியீடு உட்பட  . உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.

2012 கல்வித்திட்டம் கடந்த 2012ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சென்னையில் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றினை நடாத்தி அம்மாநாட்டுத் தீர்மானத்திற்கமைய சென்னையில் உள்ள முக்கிய பல்கலைகழகங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் மொழி வளர்ச்சி மற்றும்  புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அடையாளத்தினைப் பேணிப் பாதுகாக்கும் பணியினை எமது இயக்கம் மேற்கொண்டு அத்திட்டம் தென்ஆபிரிக்காவில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு 2015ல் எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு மலேசியாவில் புதிய யாப்பு உருவாக்கப்பட்டு உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க அகில பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்டு உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் மூலம் நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு மலேசியாவை தலமையிடமாக கொண்டு தற்போது இயங்கிவரும் நிலையில் இரண்டாவது தடவையாக அனைவரையும் உற்சாகப்படுத்தும் நோக்கோடு புதிய நிர்வாகம் இந்த மாநாட்டில்  தெரிவு செய்யப்பட்டு பொறுப்புக்கள் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது .

நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் .தமிழ்க் கல்வி. மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள்.. போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் .

தமிழ் அறிஞர்கள் துறைசார் ஆக்கங்கள்  கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.

ஆய்வரங்கம் கருத்தரங்கம் கவியரங்கம் இசை நிகழ்ச்சிகள் சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல் போன்றவை இடம்பெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு என்று ஒரு பதிப்பகம் உருவாக்கப்பட உள்ளது .இந்த பதிப்பகத்தின்மூலம் .தரமான நூல்கள்  அச்சேற்றி  வெளியிடப்பட இருக்கிறது .

இன்னும் பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு  விரைவாக செயற்படுத்தப்பட இருக்கிறது

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது .

மாநாட்டில்  பங்கு கொள்ள விரும்புவோர் கீழ் உள்ள மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

தொடர்புகளுக்கு

திரு.சுந்தரவேலு .சுப்பிரமணி

செயலாளர்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கருநாடக கிளை [email protected]

[email protected]