Mar 06

பா.இறையரசன் அவர்களின் 70 ஆம் அகவைப் பிறந்தநாள் பெருமங்கல விழா

தமிழறிஞர்  முனைவர் தஞ்சை பா.இறையரசன் அவர்களின்    70 ஆம்  அகவைப்  பிறந்தநாள் (15.03.18) பெருமங்கல விழா   "இறை 70 "  என  17.03. 2018. காரி (சனி) க்கிழமை மாலை  சென்னை சி.ஐ.டி. குடியிருப்பில் உள்ள கவிக்கோ அரங்கில்    நடைபெற உள்ளது. 

   விழா ஏற்பாட்டை  இயங்கு படமாகப் பொன்னியின் செல்வனைத் தயாரிக்கும்   திரு சரவண ராசா பொன்னுச்சாமி,   ”தி டெம்பிள்” பள்ளித் தாளாளர் திருமதி உமா பச்சையாபன், தமிழ் மையம் இயக்குநர் அருள்திரு செகத் கஸ்பார்,   கவிஞர் ஆரூர் தமிழ் நாடன்,    நடிகர் இயக்குநர் கவிஞர் “யார்” கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

விழாவில்   சிலம்பொலி செல்லப்பனார், முன்னாள் துணைவேந்தர்கள் முனைவர் திரு க.ப. அ றவாணன்,  முனைவர்திருமதி தாயம்மாள் அறவாணன், முனைவர் பொற்கோ, முனைவர் பொன்னவைக்கோ,   கூட்டுறவுத்தேர்தல் ஆணையர் முனைவர்

மு.இராசேந்திரன் இஆப,  முதலியோர் பங்கேற்பர்.

         கவியரங்க  நிகழ்ச்சியில்,  ”தொண்டு செய்வாய்   துறைதோறும்” என்ற தலைப்பில்,  ஆனைவாரியார், திருமதி செயந்தி ஆனந்தன், திருமதி கவி ஓவியா சோபனா, யார் கண்ணன், ஆரூர் தமிழ் நாடன், செம்போடை குணசேகரன் 

முதலியோர்  கவி பாடுவர். 

            நூல்கள் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்ப் பேராசிரியர் இறையரசன் அவர்களின்  ”இதழாளர் பாரதியார்”,  ”தமிழ் நாகரிக வரலாறு”,  ”தமிழ் இந்தியா -  வரலாற்றுக் களங்கள்” வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணனின்

"உலகெங்கும் தமிழினம்"  முதலிய நூல்களின் வெளியீடும் 

கரந்தைக் கல்லூரி முன்னாள்  பேராசிரியர்  செல்லனின்

"தமிழகத்தில் யமதர்மராஜன் வழிபாடு" , அனுபம் மிஸ்ராவின்

“குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன”, நூலறிமுகமும்,  

”பொன்னியின் செல்வன் - இதழ் 6” வெளியீடும்  நடைபெறும். 

                 சென்னை தமிழ் அமைப்புகள் தமிழ் நலக் கோரிக்கைள் பற்றிக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் எடுக்கப்பெறும் முடிவுகள் தீர்மானங்கள் கோரிக்கைகள் ஆகியவை தமிழக அரசின்  தமிழ் வளர்ச்சி அமைச்சரிடமும் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளரிடமும் தமி ழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமும் முன்வைக்கப்பெறும். 

கலந்து கொள்ள விரும்பும் சென்னையில் உள்ள தமிழ் அமைப்புகள்  ஒவ்வொன்றின்  சார்பிலும்   இருவர் கலந்து கொள்ளலாம்; வெளியூர் அமைப்புகள் அஞ்சல் வழி கருத்துத் தெரிவித்துப் பின்னர் நடக்கும் மாநாட்டிலும் கலந்து கொள்ளலாம்.

              சென்னையில் உள்ள தமிழ் அமைப்புகள் / கழகங்கள்  /  சங்கங்கள் / இயக்கங்கள்   கலந்து கொள்வோர் பெயரை   உடனடியாகப் பதிந்து கொள்ள வேண்டுகிறோம். 

விழாக் குழு ஒருங்கிணைப்

பாளர் :

தஞ்சை கோ.கண்ணன்,

வரலாற்றாய்வர்,

தமிழ் எழுச்சிப் பேரவைத்தலைவர்

தொடர்புக்கு: 9884025445,  9840 416727.