May 14

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுப்போட்டி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவானது நாடுகடத்த தமிழீழ அரசாங்கத்தினால் 30/07/2017 அன்று காலை 9.00 தொடக்கம் மாலை 7.00 வரை பிரித்தானியாவில் அமைந்துள்ள Morden park, London Road, SM4 5HR என்னும் இடத்தில் நடாத்தப்படவுள்ளது. 

இவ் விளையாட்டு விழாவானது புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்குடனும், நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. மற்றும் தமிழர்களின் வீரத்தினை வெளி உலகிற்கு மறுபடியும் ஒருமுறை நிரூபிப்பதற்காக தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே இவ் விழையாட்டு நிகழ்வில் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பிரித்தானிய நாடுகடத்த தமிழீழ அரசாங்கமானது வேண்டி நிற்கின்றது. இவ் விளையாட்டு விழாவில் ஒவ்வொரு தமிழரின் வீரத்தைக் காட்டுவதற்கு கீழ் காணும் (link)ஐ அழுத்தி உங்கள் குழுக்களையும் பதிவு செய்து கொள்ளலாம். 

http://www.tgtesports.co.uk/?utm_source=Viber&utm_medium=Chat&utm_campaign=Private

 அமைதி பல பிரச்சனைகளுக்த் தீர்வு, அகிம்சை பல போராட்டங்களுக்குத் தீர்வு, தீர்வை முடக்கிப் போரைத் தொடுத்தாய் அவன் உயிர் ஊசலாட அதில் நீ ஆனந்தம் கண்டாய் மண்ணையும் மரபையும் எம் மரத்தமிழனின் வீரத்தையும் முடக்கப்பார்த்தாய் மாண்டவன் மனிதனல்ல மாவீரன், சிந்திய துளிகள் குருதி அல்ல விதைகள், காலங்கள் மாறினாலும் எம் தெய்வங்களின் நினைவு எம்மைவிட்டு மாறாது மறையாது. 

விளையாட்டால் ஒன்றிணைவாம்!!!

விந்தை உலகில் வீழ்ந்து விடோம் நாம் என்று உரக்கச் சொல்லி ஒன்றிணைந்திடுவோம், 

விதி செய்வோம், தேசங்கள் கடந்தாலும் ஈழ சுவாசம் மாறாதென்ற உணர்த்திடுவோம். 

பிரிவுகள் தொலைப்போம், சரிவுகளை சரிசெய்வோம், சிந்தையில் தெளிவு கொள்வோம், 

தேகத்திற்கு பயிற்சியாக, தேசத்துக்கு உயர்ச்சியாக, வீரத்துக்கு சாட்சியாக, 

விளையாட்டால் ஒன்றிணைந்திடுவோம்..!!!  

விளையாட்டுத்துறை & சமூகநல அமைச்சு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Transnational Government of Tamil Eelam (TGTE)

 மேலதிக விபரங்களுக்கு: 

Mr.Jeyakumar MP / Mr.Yogalingam MP

Minister / Deputy Minister of Sports and Community Health (TGTE)

 Mob. : 07929 349 302

email: [email protected]

Web : tgtesports.co.uk