Nov 27

யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கை கிளை நடத்தும் கலை இலக்கிய பண்பாட்டு பெரு விழா

எதிர் வரும் 27 தைத்திங்கள் 2018 ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில்  உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கிய பண்பாட்டு பெருவிழாவினை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது . இதற்கான விழாக்குழு குழு அமைப்பதற்காக மலேசியாவில் இருந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க  அகில தலைவர் திரு .பா.கு.சண்முகம்  மற்றும்  பேராசிரியர் முரசு நெடுமாறன் . பிரான்சில் இருந்து  உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க துணைத்தலைவர்  சரவணையூர் விசு செல்வராசா. சென்னையில் இருந்து   உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க  ஆசிய ஒன்றிய தலைவர் இரா மதிவாணன்  அமெரிக்காவில் இருந்து திரு .வேல் வேலுப்பிள்ளை ஆகியோர் யாழ்பாணம் வந்து அதற்கான பணிகளை முன் எடுத்ததுடன்  தொடர்ச்சியாக  கொழும்பு தமிழ்ச்சங்கம் சென்று அங்கு பேராசிரியர் தம்பு சிவா தலைமையில்   உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க  கலை இலக்கிய பண்பாட்டு பெரு விழா தொடர்பான சந்திப்புக்களை நடத்தியுள்ளனர் .

 கொழும்பு தமிழ்ச்சங்க சந்திப்புகான ஏற்பாடுகளை  முன்னை நாள் கல்வி அதிகாரி 

  திரு .ஞா.பெ. அல்பிரட்  அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்  இந்த சந்திப்பில்.. பேராசிரியர் சபா ஜெயராசா உட்பட  உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க கொழும்பு கிளையின்  தலைவர்  கவிஞர் இள நெஞ்சன் முர்சுடீன்.  மற்றம் பல அறிஞர்கள் கலந்து  கொண்டனர் .

இந்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க  கலை இலக்கிய பண்பாட்டு பெரு விழா தொடர்பாக மலர் வெளியிட இருப்பதால்  தமிழ் இலக்கியம் பண்பாடு  கலை தொடர்பான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறது  கீழ் கண்ட  மின் அஞ்சல் முகவரிக்கு  ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு  விழாக்குழுவினர் கேட்டு கொள்கிறார்கள் .

விழாக்குழுத்தலைவராக  யாழ்மாவட்ட சர்வோதய அமைப்பாளர் சீனிவாசகம் யுகேந்திரா வும் விழாக்குழு செயலாளராக திருமதி .விசாலினி சிவகுமாரும் தெரிவு செய்யபட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக முன் எடுக்கபட்டு வருகின்றன .

அனுப்பவேண்டிய முகவரி .

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க  இலங்கை கிளை 

23.சிவன் பண்ணை  வீதி  யாழ்ப்பாணம்

மின் அஞ்சல்  [email protected]