Sep 13

யாழ் அல்வாய் பிரதேசத்தில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – தெற்கு அல்வாய் பிரதேசத்தில் கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தெற்கு அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான அருமைராஜா ஜெயந்தன் என பரித்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த நபர் தெற்கு அல்வாய் பிரதேசத்தில் உள்ள தமது வீட்டின் முன்னால் நேற்று இரவு 9 மணியளவில் கைக்குண்டுடன் நின்ற நிலையிலே பரித்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பரித்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரித்தித்துறை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.