Sep 13

பணம் கொள்ளையிட்ட நால்வர் கைது

ஹபராதுவ — போகஹகொட பகுதியில் ஒரு தொகைப் பணத்தினைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிகரெட்டுக்களுடன் சென்ற வாகனத்தில் இருந்து சுமார் 17 இலட்சத்து 50,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 14 இலட்சத்து 47,370 ரூபா பணம், கைக்குண்டு, முகத்தை முழுவதும் மறைக்கும் வகையிலான தலைக்கவசங்கள் நான்கு மற்றும் கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.