Sep 13

பல பிரதேசங்களில் இன்றைய தினம் பணி புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த பணி புறக்கணிப்பு இன்றைய தினம் வவுனியா, மாத்தறை, அம்பாறை, பதுளை மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்யை தினம் பணி புறக்கணிப்பு வட மாகாணம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு நுவரெலி மற்றும் ஹம்பாந்தொடை மாவட்டங்களில் முன்னெக்கப்பட்டது.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் போதுமான தீர்வு ஒன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் இவ்வாறு பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.