Sep 13

இன்றைய நாள் எப்படி? 13.9.2017

ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 28ம்தேதி, துல்ஹஜ் 21ம் தேதி, 13.9.2017 புதன்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 11:38 வரை; அதன் பின் நவமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 8:07 வரை; அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.


* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி

* ராகு காலம் : மதியம் 12:00 – 1:30 மணி

* எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி

* குளிகை : காலை 10:30 – 12:00 மணி


* சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்

* சந்திராஷ்டமம் : அனுஷம்

* பொது : பைரவர், கிருஷ்ணர் வழிபாடு, கரிநாள்


மேஷம்: சிறிய முயற்சியிலும் பெரிய நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச் சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.


ரிஷபம்: எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.


மிதுனம்: பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நண்பரால் உதவி உண்டு.


கடகம்: மனதில் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். தொழில் ,வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.


சிம்மம்: உங்களின் பேச்சு சிலரை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவு கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.


கன்னி: சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பாக்கிப் பணம் வசூலாகும். உடல்நலம் பலம் பெறும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். அரசாங்க வகையில் நன்மை கிடைக்கும்.


துலாம்: எதிலும் நிதானம் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்கலாம். தாயின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும்.


விருச்சிகம்: நல்லவர் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.


தனுசு: தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.


மகரம்: முக்கிய பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகலாம். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு கூடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.


கும்பம்: குடும்பத்தினரால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் தாய்வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர்.


மீனம்: உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் படிப் படியாக உயரும். சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளுக்காக பணம் செலவழிப்பர்.