Apr 09

கிளிநொச்சியில் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

கிளிநொச்சி – முறிப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆறுமுகம் என்ற 62 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தினை அடுத்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டது.