Sep 12

ரஷியாவில் 18 ஆயிரம் அடி உயர மலையில் ஏறிய ஆந்திர பெண் போலீஸ்

ரஷியாவில் 18 ஆயிரத்து 510 அடி உயரமுள்ள மவுண்ட் எல்பிரர் மலையில் ஏறி ஆந்திர பெண் போலீஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ராதிகா.

2007-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த ராதிகாவுக்கு மலைகளில் ஏறுவது பிரியம். இதுவரை அவர் 3 மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் ரஷியாவில் உள்ள மவுண்ட் எல்பிரர் பனி மலையில் ஏற ராதிகா முடிவு செய்தார். அதன்படி அவர் 18 ஆயிரத்து 510 அடி உயரமுள்ள மவுண்ட் எல்பிரர் மலையை ஏறினார்.

மிகவும் சிரமப்பட்டு மலை உச்சியை அடைந்த அவர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதனையை படைத்தார். உயரமான மலையை ஏறிய முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.