Apr 09

தேசிய விருதுக் குழு ஒரு தலைபட்சம்: ஏ.ஆர்.முருகதாஸ் சாடல்

தேசிய விருதுக் குழு ஒரு தலைபட்சமானதே என்று ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தர ஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார். சிறந்த நடிகராக அக்‌ஷய்குமார், நடிகையாக சி.எம்.சுரபி உள்ளிட்டோர் பெறவுள்ளார்கள்.

தேவிய விருதுக் குழுவை கடுமையாக சாடியுள்ளார் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்து "தேசிய விருதுக் குழுவில் உள்ளவர்களின் செல்வாக்கும் பாரபட்சமும் தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு தலைபட்சமானதே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.