Mar 02

கேரள முதல்வரின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று கூறியதால் மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை சர்ச்சையில் சிக்கினார்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த விடியோ பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

அந்தத் தொகையை எனது சொத்துகளை விற்றுக் கொடுப்பேன் என்று குந்தன் கூறியுள்ளார்.