Sep 12

8ஜிபி ரேம் கொண்ட ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 2 வெளியானது

ஸ்மார்ட் போன் உலகில் விற்பனையில் பெரிய புரட்சியை செய்து வருகின்றது ஜியோமி மொபைல்கள். அதிகம் விற்பனையாகும் மொபைல் போன்கள் வரிசையில் ஜியோமி முன்னிலையில் உள்ளது.

தற்போது 5.99 இஞ்ச் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 2 வெளியாகியுள்ளது.

மற்ற ஜியோமி போன்களை விட 2.5% ஒல்லியாகவும், 11.9% எடை குறைவாகவும் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற ஜியோமி போன்களை விட செயலில் கில்லியாக இருக்கும்.

இந்த Mi Mix 2 போனில் 835 புராசசர், 6 ஜிபி ரேம், 3,400mAh பேட்டரி, எளிதில் சார்ஜ் ஆகும் 3.0 சப்போர்ட்டர் உள்ளது. இதன் மெமரி 64,128,256 ஜிபி வரை நீட்டிக்கலாம்.

5.99 இஞ்ச் முழு HD டிஸ்பிளே உள்ளது. இதில் சோனி IMX382 சென்சார் உள்ளது. 12MP பின்புற கேமரா, 5MP முன்புற கேமரா உள்ளது.