Apr 08

ஐ.பி.எல் திருவிழா; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் லயன்ஸ்

ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டி இன்று  குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. 

இப் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது. 

குஜராத் அணி சார்பில் மெக்கல்லம் (35), சுரேஷ் ரெய்னா (68) தினேஷ் கார்த்திக்(45) ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களைக் பெற்றுக்கொடுத்தனர்.

கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர் மற்றும் கிறிஸ் லின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். 

கௌதம் காம்பீர் 48 பந்துகளில் 76 ஓட்டங்களையும், லின் 41 பந்துகளில் 93 ஓட்டங்களையும் குவித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தனர். 

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த ஜோடி 14.5 ஓவர்களிலேயே 184 ஓட்டங்களை கடந்து வெற்றியை கைப்பெற்றினர்.  அதிரடியாக விளையாடிய க்ரிஸ் லினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது