Apr 08

ஐ.பி.எல் திருவிழா; ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எதிர் மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டியில் ரகானே மற்றும் ஸ்மித் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தால்  மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே வெற்றி கொண்டது. 

ஐ.பி.எல். தொடரின் 2ஆவது போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் மும்பை அணிகள் மோதின. புனே அணியின் தலைவர் ஸ்மித் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஆரம்பம்; முதல் அதிரடியாக விளையாடினார்கள். 

மும்பை அணி 4.2 ஓவரில் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது எடுத்திருக்கும்போது பார்த்தீப் பட்டேல் (19) ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் சர்மா(03), பட்லர்(38), ரானா(34),  என அடுத்தடுத்து அரங்கு திரும்பினர்.

இறுதிக்கட்டத்தில் பாண்டியா ஆட்டமிழக்காது அதியாக ஆடி 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க அவ்வணி  20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைக் குவித்தது. 

185 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய புனே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹானே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

ரஹானே(60), ஸ்டோக்ஸ்(16) டோனி(12) என ஆட்டமிழக்க அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித் 54 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை ஆட்டமிழக்காது குவிக்க 19.5ஆவது ஓவரில் 187 எடுத்து புனே அணி வெற்றியை எட்டியது.