Apr 08

ஐ.எஸ். தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் புதைகுழி கண்டு பிடிப்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலையைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்ட 33  பேரின் சடலங்களைக் கொண்ட பாரிய மனிதப் புதைகுழியொன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெயிர் எஸோர் பிராந்தியத்தில்  கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட  இந்தப் புதைகுழி குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று  வெள்ளிக்கிழமை செய்திகளை வெ ளியிட்டுள்ளன.

 கொல்லப்பட்ட அனைவரும் 18  வயதுக்கும் 25  வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர்.

அந்த 32  பேரும் கூரான ஆயுதத்தால் கழுத்துப் பகுதி துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  சிரிய மனித உரிமைகள் அவதான  நிலையம் தெரிவிக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் சிரிய அரசாங்கப் படைவீரர்களா அல்லது   மேற்படி தீவிரவாதிகளுக்கு எதிரான குழுக்களைச் சேர்ந்தவர்களா அல்லது அந்தத் தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்பட்ட தனிப்பட்டவர்களா என்பது அறியப்படவில்லை.