Sep 08

சாம்சங் கேலக்ஸி நோட் 8: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 8 இந்திய வெளியீடு மற்றும் விற்பனை சார்ந்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஆகஸ்டு 11-ம் தேதி நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இம்மாத இறுதியில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் சூப்பர் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 930 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,561 துவங்குகிறது.சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்

- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)

- 6 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ப்ளூடூத் 5.0, எல்டிஇ

- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3300 எம்ஏஎச் பேட்டரி

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. 

இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.65,000 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 1128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் அதிகபட்சமாக கேலக்ஸி நோட் 8 விலை ரூ.70,000க்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் கூறப்படுகிறது.